இந்தப்படம் நம்ம நாட்டு படம் இல்லையா..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!!


அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், நடிகை அதிதி பாலன் நடித்த ‘அருவி’ படம் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் திரையில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருகிறது.

திரை பிரபலங்கள், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல பாராட்டுகளைப் பெற்று வருகிறது ‘அருவி’ திரைப்படம். படத்தின் இயக்குநர், படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், அருவி படம் ஒரு அரபு படத்தின் காப்பி என குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. அஸ்மா எனும் படத்தின் கதைக்களமும் அருவி படமும் ஒரே மாதிரி என கூறி வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அரபு மொழியில் 2011-ல் வெளிவந்த எகிப்திய திரைப்படம் ‘அஸ்மா’. இந்தப் படம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ‘அருவி’ படத்தின் கதையும் கிட்டத்தட்ட அதே போன்றதுதான் என கூறிவருகிறார்கள்.


சலாமா எனும் பிரபல இயக்குநர், எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து இந்தப் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகையின் இளமைக்காலத்தை வைத்து படம் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.

‘அஸ்மா’ படத்தில் நடிகைக்கு தான் எய்ட்ஸ் நோயாளி என்பதை மிகவும் ரகசியமாகவே வைத்திருப்பாள். அவளுக்கு வேறு ஒரு ஆபரேஷன் செய்யவேண்டியிருக்கும். ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழையும்போதுதான் டாக்டரிடமே தனக்கு ஹெச்.ஐ.வி பாசிடிவ் இருப்பதை வெளிப்படுத்துவாள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஆனால் ‘அருவி’ படத்தில் அருவிக்கு எய்ட்ஸ் இருப்பது அவளுடன் இருக்கும் அனைவருக்கும் தெரியும். கதை மட்டும் ஒன்று போல இருந்தாலும், ‘அருவி’ படம் ஒன்றும் காப்பி அல்ல. இயக்குநர் இன்ஸ்பையர் ஆகி தான் எடுத்துள்ளார்.


அடக்கடவுளே…
அப்ப அருவி படமும் உருவி எடுத்தது தானா??
ஆனாலும் அதை நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி மாத்தி நல்ல படமா தந்ததற்க்கு பாரட்டலாம்.

அடக்கடவுளே… அப்ப அருவி படமும் உருவி எடுத்தது தானா?? ஆனாலும், அதை நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி நல்ல படமா தந்ததற்கு பாராட்டலாம் என ஒருவர் கருத்து கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!