இளம் இயக்குனரை மேடையில் அவமானப்படுத்திய பிரபல இயக்குனர்..!! கடுப்பில் ரசிகர்கள்..!!!


தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கப்படும் இயக்குனராகி விட்டார் அட்லி. இவர் இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல் படங்கள் மெகா ஹிட் படங்களாகும். அதிலும் மெர்சல் படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவேயும் தாறுமாறு ஹிட் அடித்தது.

அதே நேரம் அவர் பிற படங்களை காப்பி எடுத்து சினிமா எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த நிலையில் பலூன் பட இயக்குனர் சினிஷ் கூட அட்லியை மறைமுகமாக சாடி உள்ளார்.


பலூன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.

இதில் கலந்து கொண்ட இயக்குனர் சினிஷ் பேசும்போது, இந்த படத்தில் பல ஹாலிவுட் படங்களின் பாதிப்பு இருக்கும். இதனை நான் ஓப்பனாக ஒப்பு கொள்கிறேன்.

ஏனெனில் மவுனராகம் போன்ற ஒரு படத்தை எடுத்து விட்டு, அந்த படத்தையே பார்க்கவில்லை என்று கூற முடியாது என்று கூறி உள்ளார். அட்லியை மறைமுகமாக பலூன் இயக்குனர் தாக்கி உள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.