வெற்றிமாறன் இயக்கத்தில் டாப் நடிகர்.. வெளியான சுவாரஸ்ய தகவல்..

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என மாபெரும் வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் சூர்யாவுடன் வாடிவாசல் மற்றும் சூரியுடன் ஒரு படம் என கமிட்டாகி இருக்கிறார் வெற்றிமாறன்.

இதனிடையில் தற்போது நெட்ப்ளிக்ஸ் தளத்திற்கு பாவக்கதைகள் எனும் ஆந்தாலஜி சீரிஸ் ஒன்றை மூன்று இயக்குனர்களுடன் இணைந்து இயக்கியுள்ளார் வெற்றிமாறன்.

இதற்கான ப்ரோமோஷன் நேர்காணலில் கலந்து கொண்ட வெற்றிமாறன் பல கேள்விகளுக்கு விடையளித்தார். இதில் ஒரு நபர் ” கமலஹாசன் என்னும் தமிழ் சினிமாவின் தரமான கலைஞனுடன் இணைந்து பணியாற்ற விரும்பியிருக்கீறீரா ? ” என்று கேள்வி கேட்ப்பட்டது.

இதற்கு பதிலளித்த வெற்றிமாறன் ” முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுப்பதென்பது நாம் மாட்டும் யோசிப்பது கிடையாது, அவங்களுக்கு அந்த சிந்தனை இருக்க வேண்டும். அவர்களின் கால்ஷீட் பிரீயாக இருக்க வேண்டும். அவர்களுக்கும் நமக்கும் சரியான கதை அமைய வேண்டும். அப்படி நிகழும் பொழுது படம் பண்ண முடியும். கண்டிப்பாக கமல் சார் மாதிரியான ஆர்ட்டிஸ்ட் உடன் படம் பண்ணுவது ஒரு பிரியமான விஷயமாக இருக்கும். ” என கூறியுள்ளார் வெற்றிமாறன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!