தலைசிறந்த பெண்ணின் வாழ்க்கை கதையை படமாக்கும் டிராபிக் ராமசாமி பட இயக்குனர்

எஸ் ஏ சந்திரசேகர் நடிப்பில் வெளியான டிராபிக் ராமசாமி படத்தின் இயக்குனர் தற்போது தலைசிறந்த பெண்ணின் வாழ்க்கை கதையை இயக்குகிறார்.

ஒரு சாதாரண மில் தொழிலாளியின் மகளாய் பிறந்து, லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றிய உமா பிரேமனின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

ஏறக்குறைய இரண்டு லட்சம் டயாலிசிஸ்கள், இருபதாயிரத்திற்கும் மேலான இதய அறுவை சிகிச்சைகள், நூற்றுக்கணக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள், மலைவாழ் மக்களுக்கு பள்ளிக்கூடங்கள், நாட்டிலேயே குறைந்த விலையில் வீடுகள் என பல எளிய மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் உமா பிரேமன்.

இந்திய குடியரசு தலைவர் தன் மாளிகையில் விருதும், விருந்தும் கொடுத்து கெளரவித்த பெண்மணிகளில் இவரும் ஒருவர். இப்படி பல சாதனைகளை செய்த இவரின் அசாதாரணமான வாழ்க்கையே தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் பயோபிக் திரைப்படமாகிறது.

இப்படத்தை டிராபிக் ராமசாமி படத்தை இயக்கிய விக்னேஸ்வரன் விஜயன் இயக்குகிறார். விரைவில் இப்படத்தின் தலைப்பு, நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலை வெளியிட இருக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!