பிக்பாஸ் 4-ல் கலந்துக் கொள்ளும் பிரபல நடிகையின் சகோதரர்

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் பிக்பாஸ் சீசன் 4-ல் பிரபல நடிகையின் சகோதரர் கலந்து கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் பிக்பாஸ் குறித்த தகவல்கள் அடிக்கடி வைரலாகி வருகிறது. தமிழில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4-ன் 2வது புரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இரண்டாவது புரமோவிற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, நடன இயக்குநரும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான சாண்டி நடனம் அமைத்தார். இதனையடுத்து தமிழ் பிக்பாஸில் கலந்து கொள்பவர்கள் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகம் காணமுடிகிறது.

இந்நிலையில் தெலுங்கில் நாகர்ஜூனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று முதல் துவங்கி உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இதில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து வரும் சுஜிதா, தனது சகோதரர் சூர்யா கிரண் பிக்பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு வாழ்த்துகளையும் கூறி இருக்கிறார் சுஜிதா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!