விஜய்யின் 65வது படம் குறித்து வந்த உண்மை தகவல்- இதுதான் வதந்தி

இளைய தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக போகும் படம் மாஸ்டர்.

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படம் டாக்டர் படிப்பை பற்றி பேசும் கதை என்கின்றனர்.

ஸ்பெஷல் விஷயம் என்னவென்றால் விஜய் படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கிறார், அந்த லுக்கில் தளபதியை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இப்படத்தை தொடர்ந்து 4வது முறையாக விஜய்-முருகதாஸுடன் இணைந்து பணிபுரிய இருக்கிறார்.

படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தான் இப்படத்திற்கு தளபதி என்ற பெயரை படக்குழு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வந்தன.

ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தியாம், படக்குழு தரப்பில் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களுக்கு வரும் வதந்தி போல் இந்த செய்தியும் வந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!