எந்த நடிகருக்கும் நான் போட்டி இல்லை..!! பிரபல நடிகர் ஓபன் டாக்…!!


பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவா, தனுசுடன் தனக்கு எந்த மோதலும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

என்னுடைய படங்கள் தாமதமாவதாகவும் ஆண்டிற்கு நான் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் விமர்சிக்கப்படுகின்றன. சில படங்களின் கதைக்கு ஏற்றாற்போல் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருப்பதாலும் ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்துக்கு செல்ல வேண்டும் என்று நான் முடிவு செய்ததாலும் இந்த தாமதங்கள் ஏற்பட்டுவிட்டன.


அடுத்த வருடத்திலிருந்து ஆண்டுக்கு 2 படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். எந்த நடிகருக்கும் நான் போட்டி இல்லை. வியாபார ரீதியாக என்னுடைய முந்தைய படங்களைத்தான் நான் போட்டியாக பார்க்கிறேன். ஒவ்வொரு நடிகருக்கும் அவரவருக்கான தனி இடம் சினிமாவில் இருக்கிறது. அதை யாரும் பறிக்க முடியாது.

தனுஷுக்கும் எனக்கும் எவ்வித மோதலும் இல்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதும் இல்லை. மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்ற கொள்கையுடன் அவர்கள் வரவேண்டும். அப்படிப்பட்டவர்களை மக்களே ஏற்று அவர்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். நான் அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கவில்லை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

வழக்கமான நகைச்சுவை பாணியிலிருந்து விலகி தற்போது வேலைக்காரன் என்ற சீரியஸ் படத்தில் நடித்து இருக்கிறேன்


மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்யும் ஒரு இளைஞனுக்கு அவன் வாங்கும் ஊதியம் போதாமல் இருக்கிறது. தான் சம்பாதிக்கும் பணம் எங்கே போகிறது என்ற அவனது உணர்ச்சிகரமான தேடலே இந்த படம்.
ஒரு நடிகனாக என்னை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை இந்த படம் எனக்கு வழங்கி இருக்கிறது.

கமர்ஷியல் படங்களை நான் விரும்பினாலும் கூட வேலைக்காரன் போன்ற சமூகம் சார்ந்த கதைகள் அமையும்போதும் நடிப்பேன். வேலைக்காரன் படத்தில் நடிகை நயன்தாரா கதாபாத்திரம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பதுபோலவே அவரது கதாபாத்திரம் இருக்கும். படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அவர் வந்து விடுவார். கேரவேனில் போய் எல்லாம் உட்கார மாட்டார்.

அதிக பொருட்செலவில் கூவம், ரெயில்வே மேம்பாலம் மற்றும் குடியிருப்பு அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!