கமல் படத்தால் சுந்தர்.சி-க்கு ஏற்பட்ட நிலைமை… ரசிகருக்கு பதிலடி கொடுத்த குஷ்பு

கமல் படத்தால் சுந்தர்.சி-க்கு ஏற்பட்ட நிலைமை பற்றி ரசிகருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் குஷ்பு.

சுந்தர்.சி இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண் உள்ளிட்டோரின் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான படம் அன்பே சிவம். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக போதிய வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் கொண்ட தமிழ் படமாக அன்பே சிவம் இருப்பதாக கமல் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கருத்து பதிவிட அதற்கு பதிலளித்த குஷ்பு, படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் என் கணவர் இரண்டு வருடங்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது” என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், வின்னர் 2001-ம் ஆண்டு படமாக்கப்பட்டு தாமதமாக வெளியானது. அன்பே சிவம் தோல்விக்கு பின்னர் சொந்தமாக கிரி படத்தை எடுக்க வேண்டிய நிலைமை வந்தது. அன்பே சிவம் 2003-ம் ஆண்டிலும், கிரி 2004-ம் வருடமும் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள். அதனால் ரொம்ப அதிக பிரசங்கம் பண்ண வேண்டாம் தம்பி. அறிவாளி நினைச்சிட்டு முட்டாளா தெரியுரிங்க ” என்று அந்த நெட்டிசனுக்கு பதிலளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!