புதிய படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா?

டாக்டர் என்ற வெற்றி படத்தை கொடுத்து ஹிட் நடிகர் என்ற அந்தஸ்தை இந்த வருடத்தில் பெற்றுவிட்டார் சிவகார்த்திகேயன்.

அடுத்தடுத்து டான், அயலான் போன்ற திரைப்படம் எல்லாம் வெளியாக இருக்கிறது.

படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் சிவகார்த்திகேயன் அடுத்து டான் படத்தில் எப்படி நடித்துள்ளார், என்ன கதையாக இருக்கும் என இப்போதே ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நேரத்தில் தான் சிவகார்த்திகேயன் தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். அனுதீப் கிஷன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார், படத்திற்கு SK20 என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 25 கோடி சம்பளம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!