அனுஷ்காவுடன் மோத தயாரான ராணா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா, நடிகை அனுஷ்காவுடன் பட வெளியீட்டில் மோத உள்ளார்.

விஷ்ணு விஷால் – ராணா டகுபதி இணைந்து நடிக்கும் படம் காடன். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்புக்கு `ஆரண்யா’ எனவும், இந்தி பதிப்புக்கு `ஹாதி மெரே சாதி’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்குனர் பிரபு சாலமன் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். மேலும் புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யானையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 2-ம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடித்துள்ள ‘சைலன்ஸ்’ திரைப்படமும் அதே தினத்தில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!