50 வது படத்தோடு கதை முடிந்தது சொன்னார்கள், ஆனால், இன்று விஸ்வரூப வளர்ச்சி, தளபதி ஸ்பெஷல்

தளபதி விஜய் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு உச்ச நட்சத்திரம். 6 முதல் 60 வரை இவருக்கு அனைத்து தரப்பினர்களிலும் ரசிகர்கள் உள்ளனர்.

சினிமாவில் காலடி எடுத்து வைத்த போது ஒவ்வொரு பத்திரிகைகளும் இவரை இகழ்ந்து தான் கட்டுரைகள் வெளியிட்டது, ஆனால், இன்று அந்த பத்திரிகையில் வியாபாரத்திற்கே இவரின் முகம் அட்டைப்படமாக தேவைப்படுகின்றது.

விஜய் பெயருக்கு ஏற்ற வெற்றி இவருக்கு எளிதில் கிடைக்கவில்லை, தன் தந்தையின் இயக்கத்தில் பல படங்களில் நடித்தாலும், இவருக்கு எந்த படமும் பெரிய திருப்பத்தை தரவில்லை.

பூவே உனக்காக விஜய்க்கான முகவரியை கொடுக்க காதலுக்கு மரியாதை, லவ் டுடே என காதல் நாயகனாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார்.

ஹீரோ என்றாலே வெள்ளைத்தோல் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரத்தை உடைத்த ரஜினி, விஜயகாந்தை தொடர்ந்து நம்ம பக்கத்துவீட்டு பையன் போல் சினிமாவில் கலக்கியவர் தான் விஜய்.

விஜய் தான் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக வரவேண்டும் என பல படங்களில் முயற்சித்து தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த இவருக்கு, திருமலை திருப்புமுனையாக அமைந்தது.

அதை தொடர்ந்து கில்லி, திருப்பாச்சி, மதுர, சிவகாசி என ஆக்‌ஷன் அட்ராசிட்டி தான், அனைத்தும் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது.

ரஜினிக்கு பிறகு நம்பி போகலாம் என்று நினைக்கும் ஒரு ஹீரோவாக விஜய் வளர்ந்து வந்த நேரத்தில், அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என தொடர் தோல்விகள் இவரை சூழ்ந்தது.

அதிலும் சுறாவில் எல்லாம் அனைத்து விநியோகஸ்தர்களும் நஷ்ட ஈடு கேட்க, விஜய் கெரியர் இனி அவ்வளவு தான், அவரால் மீண்டும் கூட வர முடியாது என்று முடிவே செய்துவிட்டனர்.

இதற்கு முன்பு எந்த ஒரு நடிகரும் இப்படி ஒரு கேலி, கிண்டல்களை சந்தித்து இருக்க மாட்டார், அப்படி சந்தித்து இருந்தாலும் அவர் மீண்டு வந்திருக்க மாட்டார்.

ஆனால், இந்த இரண்டுமே அன்று நடந்தது, 2012 நவம்பர் 13ம் தேதி துப்பாக்கி என்ற படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸை சீறி பாயும் தோட்டாவாக வெடிக்க வைத்தார்.

சுமார் ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூலை பெற்று மீண்டும் தன் வசூல் கணக்கை தொடங்கிய தளபதிக்கு அரசியல் மூலமாக பல பிரச்சனை

விஜய் படங்கள் வரவே கூடாது, அப்படி ஒரு நடிகர் இருக்க கூடாது என சில வேலைகள் நடக்க, அடுத்தடுத்து கத்தி, தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை கொடுத்து பதிலடியை மட்டுமே விஜய் பதிலாக தந்தார்.

மகுடத்திற்கு எல்லாம் மகுடம் வைத்தார் போல் பிகில் மூலம் ரூ 300 கோடியை கடந்து ரஜினிக்கு இணையாக அருகில் சேர் போட்டு அமர்ந்துள்ளார் விஜய், விஜய்யின் இந்த 27 வருட திரைப்பயணத்தில் அவர் சந்திக்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை, ஆனால், எந்த ஒரு தருணத்திலும் அவருடைய ரசிகர்கள் அவரை விட்டு சென்றது இல்லை, அதற்காகவே இன்று தமிழ் சினிமாவின் அதிபதியாக தளபதி இருந்து வருகின்றார்,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!