மெகா ஹிட் படத்தை ரீமேக் செய்ய ஆசைப்பட்ட அஜித், ஆனால் நடக்காமல் போனது, என்ன படம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் தல் என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வந்தது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

கொரொனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நின்றுள்ளது, கொரொனா பிரச்சனைகள் முடிந்த கையோடு இப்படத்தின் படபிடிப்பு வெளிநாட்டில் தொடங்குமாம்.

இந்நிலையில் அஜித் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பில்லா படத்தை ரீமேக் செய்து மெகா ஹிட் கொடுத்தார், அந்த படம் அஜித்தின் திரைப்பயணத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.

ஆனால், அஜித் நீண்ட வருடங்களாக ஜானி படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என மிக ஆசையாக இருந்தாராம்.

அதுக்குறித்து அப்படத்தின் இயக்குனர் மகேந்திரன் அவர்களை சந்தித்து கூட பேசினாராம்.

ஆனால், அவரால் அதில் நடிக்க முடியாமல் போனது, இந்த தகவலை மகேந்திரன் மகன் ஜான் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!