என் தங்கமே.. உருகி உருகி நயன்தாராவிற்கு நன்றிகூறிய விக்னேஷ் சிவன்.! என்னவெல்லாம் கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . பல்வேறு சர்ச்சைகள் தன்மீது எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார் நயன்தாரா.இந்நிலையில் அவர் சமீபத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து, தனது தனி திறமையை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி வந்தார்.

https://www.instagram.com/p/BwIh95rgfpz/

அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் பிரபல ஹீரோக்களுடன் அதிகமான பட்ஜெட் படங்களில் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார். சாய்ரா நரசிம்மரெட்டி, பிகில், தர்பார், லவ் ஆக்சன் ட்ராமா என தமிழ், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா இயக்குனர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களை கொண்டுள்ள விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். அவர் நயன்தாராவிற்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருந்து வருகிறார்.

https://www.instagram.com/p/B2jViNwho5A/?utm_source=ig_embed&utm_campaign=dlfix

இந்நிலையில் நேற்று நடிகை நயன்தாரா தனது காதலன் பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அதற்கு விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார். அதில் நீ என் பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமான நாட்களே. இந்த இனிமையான பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு மிக்க நன்றி என் தங்கமே. ஆசீர்வதிக்கப்பட்ட இந்த பிறந்த நாளில் என்னுடன் இருந்த அனைத்து அன்பார்ந்த நண்பர்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.