நிகழ்ச்சியை விட்டு வெளியேறுங்கள்.! சேரனுக்கு கோரிக்கை வைத்த தேசிய விருது பெற்ற இயக்குனர்.!

இயக்குநர் சேரன் கடந்த சில வருடங்களாக திரையுலகில் வெற்றி பெறாமல் இருந்தாலும், அவர் ஒரு தேசிய விருது பெற்ற இயக்குனர் என்பதும் அவரது ‘ஆட்டோகிராப்’ உள்பட பல வெற்றிப் படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

பாலுமகேந்திரா, மகேந்திரன் வரிசையில் சேரனின் படங்களும் பொக்கிஷமாக வைத்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக அவரது முதல் படமான ‘பாரதி கண்ணம்மா’ திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் பலரது மனதில் இருந்து அகலாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் சேரனின் உண்மையான மதிப்பு தெரியாமல் அவர் அவமதிக்கப்பட்டு வருகின்றார். குறிப்பாக சரவணன் சேரனை ஒருமையில் பேசுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும் என பிரபல இயக்குனர் வசந்தபாலன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்!உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும்.காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த…

Gepostet von Vasanta Balan am Freitag, 2. August 2019

அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்!உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும்.

காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த செய்தி ஊடேறி உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன். உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன். வித்யாகர்வத்துடன் நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது. பருந்து பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப்படைப்புகள்.

திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள். காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது. இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுகேந்திராவுடன் ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள்.

பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது. நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய. உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில் கவுரவக் குறைவு ஏற்பட்ட போது உடனே அதை விட்டு வெளியேறினீர்கள். ஆகவே கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்.

இவ்வாறு இயக்குனர் வசந்தபாலன் குறிப்பிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.