மாஸ்டர் படத்தின் முதல் ரிவ்யூ இது தான், படக்குழுவினர்கள் கூறிய சூப்பர் தகவல் இதோ..

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தின் டீசர் வெளியாகி வேற லெவல் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மாஸ்டர் படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இபபடத்தின் வெளியிட்டிற்காக பலரும் தயாராகி வருகின்றனர், அந்த வகையில் அடுத்த மாதம் பொங்கல் அன்று மாஸ்டர் திரைக்கு வரும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் படக்குழுவினர், இப்படத்தின் முழு கட்டையும் பார்த்துள்ளனர், மேலும் இதனை பார்த்த பிறகு படக்குழு முழு திருப்தி அடைந்துள்ளதாம்.

அதுமட்டுமின்றி இன்று (14/12/2020) மாஸ்டர் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், வரும் புதன்கிழமை (16/12/2020) அன்று சென்சார் பணி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!