பிரபல நடிகருக்கு 1 கோடி.. ஆடிய ஷெரிலுக்கு 2 கோடி..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!!


நடிகர் மோகன்லால் நடித்த வெளிப்பாடிண்டே புஸ்தகம் திரைப்படம் வெளியானது. இந்தப்படத்தில் ஜிம்மிக்கி கம்மல் பாடல் இருந்தது.

ஆனால் அப்போது படம் வெளிவந்த பிறகு அவ்வளவாக யாருக்கும் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், ஓணம் சமயத்தில் கேரளாவை சேர்ந்த ஷெரில் என்பவர் தனது நடனக்குழு மூலம் ஜிம்மிக்கி கம்மலுக்கு டான்ஸ் ஆடினார்.

இதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். பதிவேற்றம் செய்த சில மணி நேரத்திலேயே பாடல் சூப்பர் ஹிட்டானது. மொழி தெரியாதவர்கள் கூட அந்த பாடலுக்கு ஆட்டம் போட ஆரம்பித்தனர்.


அப்படி இருக்கும் நிலையில் படம் வெளியான போது யாருக்கும் தெரியாமல் இருந்த பாடல் ஷெரில் ஆட்டத்துக்கு பிறகு நல்ல ஹிட் ஆனது.

இதனையடுத்து மீண்டும் மோகன்லாலை வைத்து இயக்குனர் லால் ஜோஸ் ஜிமிக்கி கம்மல் பாடல் மட்டும் தனியாக படமாக்கப்பட்டது.

அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த பாடல் செம்ம வைரலாக பரவியது.

இன்றைய நிலவரப்படி ஷெரில் ஆடிய ஜிம்மிக்கி கம்மல் 2 கோடி பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. மோகன்லால் வெர்ஷன் 1 கோடி பார்வையாளர்கள் என்கிற அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!