பிக்பாஸ் வீட்டில் அடுத்து நுழையப்போகும் பிரபல சீரியல் நடிகை..!

தமிழில் 3வது பிக்பாஸ் சீசன் தொடங்கப்பட்டு ஒரு மாதிரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறார்களோ இல்லையோ சண்டைகள் மட்டும் அதிகம் போட்டு வருகின்றனர்.

வனிதா இருந்த போது சண்டை வந்தது, இப்போது மீராமிதுன் அவர் இடத்தை பிடித்து வருகிறார். அண்மையில் நடிகை ஷாலு ஷம்மு தன்னை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்தால் கண்டிப்பாக செல்வேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் அடுத்த போட்டியாளராக விஜய் டிவி பிரபலம் செல்வார் என்று நினைக்கிறேன், அதிலும் என்னுடைய கணிப்பு ஆல்யா மானசா தான், அவரது ராஜா ராணி சீரியலும் முடிந்துள்ளது.

இரண்டு வருடமும் 2 விஜய் டிவி பிரபலங்கள் வந்துவிடுகிறார்கள், இப்போது வீட்டில் கவின் உள்ளார், அடுத்து ஆல்யாவாக தான் இருப்பார் என்று பேசியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.