தர்ஷனுக்கு மறைமுக ஆதரவு கொடுத்த லாஸ்லியா!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை முதல்முறையாக எதிர்த்து பேசிய தர்ஷனுக்கு வனிதாவின் குரூப்பில் இருந்தே ஆதரவு கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் அதெல்லாம் உண்மையான ஆதரவா? தர்ஷனை மாட்டிவிட செய்யும் சதியா என்பது போகப்போகத்தான் தெரியும்.

ஆனால் தர்ஷனின் நியாயமான வாக்குவாதத்திற்கு உண்மையாக மனமாற அதே சமயத்தில் யாரும் அறியாமல் மறைமுக ஆதரவு கொடுத்தார் லாஸ்லியா. வனிதாவிடம் சண்டை போட்டுவிட்டு வந்து உட்கார்ந்த தர்ஷனிடம் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்த நிலையில், வழக்கம்போல் இந்த பிரச்சனையிலும் தலையிடாத லாஸ்லியா, தர்ஷனின் கையை குலுக்கி ‘நல்ல கதைச்ச’ என்று கூறி பாராட்டுக்களை தெரிவித்தார். லாஸ்லியா பாராட்டியதை மற்ற போட்டியாளர்கள் கவனித்ததாக தெரியவில்லை. நேற்றைய நிகழ்ச்சியை கூர்ந்து பார்த்தவர்கள் இதனை கவனித்திருக்கலாம்.

தர்ஷனை வனிதாவிடம் ஏற்றிவிட ஒருசிலர் முயற்சி செய்தாலும் தர்ஷனின் இந்த எதிர்ப்பால் வனிதா கொஞ்சம் ஆடிப்போயுள்ளதாக தெரிய வருகிறது. உடனே சமாதானம் அடையும் கேரக்டர் இல்லாத வனிதா, நேற்று இந்த பிரச்சனையை பெரிதாக்க விரும்பாமல், தர்ஷனிடம் சிறிது நேரம் கழித்து விளக்கம் அளித்ததோடு, அவரிடம் சமாதானமும் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.