அசிங்கப்பட்டு போய்டுவீங்க.. அவ்ளோ தான், ஆவேசப்பட்டு பேசிய சரவணன்.!

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் இதுவரை அமைதியாக புள்ள பூச்சி போல் இருந்து வந்த சரவணன் கோபப்பட்டு பேசியுள்ளார்.

தனக்கு யாரும் சப்போர்ட்டாக இல்லை என பேசிய அவர் அவன் அவன் அவங்களோட வேலையை பாருங்க, இனிமே எவனாவது பேசுனா அசிங்கப்பட்டு போயிடுவீங்க என கோபப்படுகிறார்.

சரவணன் எதற்காக இப்படி கோபப்படுகிறார்? அப்படி என்ன தான் ஆச்சு என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.