மணிரத்னம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பிரபல பாடகர்

இயக்குனர் மணிரத்னத்தின் தயாரிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள படம் வானம் கொட்டட்டும். விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மடோனா செபஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் என இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

வானம் கொட்டட்டும் படத்துக்கு இசையமைக்க 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அவர் பல படங்களில் பிஸியாக இருப்பதால் அவருக்கு பதிலாக சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.

மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான சித் ஸ்ரீராம் தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடல் பாடி ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் சித் ஸ்ரீராமை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.