பீட்சா 3 – விமர்சனம்

சென்னையில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருபவர் அஸ்வின் காகுமனு. இந்த ரெஸ்டாரண்டில் உரிமையாளருக்கோ, பணியாளர்களுக்கோ தெரியாமல் அடிக்கடி ஒரு சுவீட் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சுவீட் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. யார் சுவீட் செய்தார்கள் என்று மர்மமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து இரண்டு கொலைகள் நடக்கிறது. யார் சுவீட் செய்தார்கள்? கொலைக்கான காரணம் என்ன? மர்ம கொலையாளிகள் யார்? என்பதே மீதி கதை. ரெஸ்டாரண்டில் நடக்கும் மர்மங்களுக்கு விடை தெரியாமல் தத்தளிக்கும் காட்சிகளில் அஸ்வின் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவரது காதலியாக வரும் பவித்ரா மாரிமுத்து பேய்களுடன் நேரடியாக ‘செயலி மூலம் பேசி போராடி கடைசியில் கண்டுபிடிப்பதும் காதலனுக்கு ஆதரவாக அண்ணனிடம் நடக்கும் சம்பவங்களை கூறி விசாரணையை திருப்பும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. படம் ஆரம்பம் முதல் முடிவு வரை  திகிலாகவே செல்கிறது. எங்காவது ஓரிடத்தில் சிறிய காமெடியை சேர்த்து இருக்கலாமே என்பது ரசிகர்களின் முணுமுணுப்பாக இருக்கிறது. கிளைமேக்ஸ் காட்சிகள் படத்திற்கு உயிரோட்டமாக உள்ளது. ஆனால், பேய் படங்களுக்கு உண்டான அதே பாணியை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் மோகன் கோவிந்த். சில வருடங்களுக்கு முன்பு ஒரு அப்பார்ட்மெண்டில் மன வளர்ச்சி குன்றிய மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை நினைவு கூறும் படமாக அமைந்துள்ளது பீட்சா 3. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அபியும், தட்டி கேட்ட அவரது தாயார் அனுபமா குமார் ஆகியோரின் கதாபாத்திரம் மனதில் நிற்க வைக்கிறது. பிரபு ராகவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். அருண்ராஜ் இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. மொத்தத்தில் பீட்சா 3 டேஸ்ட் குறைவு.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!