கவினுக்கு எதிராக களமிறங்கிய மீராமிதுன்: பொங்கிய ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் மீராமிதுன் நுழையும் வரை போட்டியாளர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் மீராமிதுன் நுழைந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே பிரச்சனைகளும் நுழைய ஆரம்பித்தன. மீராமிதுன் முதலில் அபிராமி, வனிதா என வரிசையாக ஒவ்வொருவரிடம் சண்டை போட்டு வந்த பின்னர் தற்போது அடுத்ததாக கவினுடன் மோதுவது குறித்து சற்றுமுன் வெளியான வீடியோவில் உள்ளது.

ஹெல்ப் பண்ணக்கூடாதுன்னு ரூல் இருக்குல்ல, ரூல்ஸை முதலில் ஒழுங்காக படி என கவின் கூற, நான் மறைமுகமாகத்தான் ஹெல்ப் செய்தேன் என்று மீரா பதிலளிக்க அதற்கு மீண்டும் கவினுடன் எகிறுகிறார் மிராமிதுன்.

எதிர்பார்த்தது போலவே கவினுக்கு பிக்பாஸ் போட்டியாளர்களிடையே ஆதரவு குவிய, மீராமிதுன் தனிமைப்படுத்தப்பட்டார். ஒருகட்டத்தில் மோகன் வைத்யாவை மீரா எதிர்த்து பேச, மோகன் பொங்கி எழுகிறார். வயது வித்தியாசம் இல்லாமல் பேசுகிறாய், வயசுக்கு மதிப்பு குடு என மோகன் டென்ஷனாக கத்த தொடங்கியதும் மீரா அமைதியாகிறார்.

மீராவால் பிக்பாஸ் வீட்டில் இன்னும் பல பிரச்சனைகள் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் மீராவை வெளியேற்ற மக்கள் வாக்களித்தாலும் பிக்பாஸ் வெளியேற்ற மாட்டார் என்றே தோன்றுகிறது.