21 வருடங்கள் கழித்து ஹிந்தியில் ரீமேக் ஆகும் அஜித்தின் படம்.. செம்ம மாஸ்..

தல அஜித் குமார் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர்.

மேலும் வசூலிலும் மாபெரும் சாதனைகளை செய்து வரும் முன்னணி தமிழ் நட்சத்திரம்.

ஆம் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விஸ்வாசன் மற்றும் மேற்கொண்ட பார்வை ஆகிய இரு படங்களுமே வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

ஆம் விஸ்வாசம் 187 கோடி வசூல் செய்து 2019 ஆம் ஆண்டில் மாபெரும் லாபகரமான படமாக அமைந்தது.

மேலும் நேர்கொண்ட பார்வை படம் 107 கோடி வரை வசூல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடிப்பில் பல படங்கள் வந்தாலும் நம்மால் எழிதலவில் மறக்க முடியாத படங்களில் ஒன்று வாலி.

எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தல அஜித், சிம்ரன் இணைந்து நடித்து மாபெரும் வெற்றி கண்டு, அஜித்தின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படம் வாலி.

இந்நிலையில் தற்போது இப்படத்தை ஹிந்தியில் போனி கபூர் ரீமேக் செய்து தயாரிக்க போகிறாராம். மேலும் வாலி படத்தின் ரீமேக்கில் தனது மகனை ஹீரோவாக அறிமுகம் செய்ய போகிறாராம் போனி கபூர்.

மேலும் போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை எனும் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!