விஜய் அப்பாவுக்கு திடீரென வந்த பார்சல்! உள்ளே என்ன இருந்தது தெரியுமா? புகைப்படங்கள் உள்ளே

விஜய்யின் அப்பாவும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பாஜகவின் காவி வேட்டி ஒன்றை பார்சலாக அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் மற்றும் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்தது. இதையடுத்து தேர்தல் முடிவு வருவதற்கு முன்னர் கருத்துக்கணிப்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

அப்போது, வடபழனியில், காப்பாத்துங்க நாளை சினிமாவை என்ற குறும்பட வெளியீட்டு விழா நடந்தது. இதில், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு பேசினர். இந்த விழாவில் கலந்து கொண்டு விஜய்யின் அப்பாவும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சினிமாவை அழிக்கத் தான் நினைப்பதாகக் குற்றம் சாட்டினார்.

சினிமாவில் இருந்து முதலமைச்சர் ஆனவர்களும சினிமாவை வளர்க்க நினைக்கவில்லை என்று கூறிய அவர், எங்கே வளர்த்து விட்டால், முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து விடுவார்களோ என்று நினைப்பதாகவும் விமர்சித்தார். தொடர்ந்து, தேர்தல் முடிவுக்கு முன் வெளியான கருத்துக்கணிப்பை வைத்து, தமிழகத்தைப் பொறுத்தவை தப்பித்துக் கொள்வோம், ஆனால், வெளியில் பொறுத்தரை கண்டிப்பாக தவறு செய்திருப்போம்.

பணத்திற்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. பணம் அதிகமாகவே விளையாடியிருக்கிறது. அதனால், இந்த முறையும் நாம் தவறு செய்திருப்போம். கண்டிப்பாக காவி வேட்டி கட்டிக்கிட்டு அழையப் போகிறோம் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதற்கு இயக்குநர் எஸ்.ஏ.சிக்கு தன் மகன் விஜய்-ஐ முதல்வராக்க ஆசை. அதனால் இவ்வாறு பரபரப்பாக பேசி மக்கள் கவனம் ஈர்க்க முயற்சி செய்கிறார் என்று விமர்சகர்கள் தாறுமாறாக விமர்சனம் செய்தனர்.

இந்த பேச்சு அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடந்த 23ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகியது. இதில், பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டு முகவரிக்கு பாஜகவினர் ஒரு பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதில், காவி வேட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், கடிதம் ஒன்றும் பார்சலாக வந்துள்ளது. அதில், பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி என்றும், முதல் தவணையாக காவி வேட்டி அனுப்பியுள்ளோம். இனி ஒவ்வொரு தவணையாக காவி வேட்டி அனுப்பிக் கொண்டே இருப்போம். ஏனென்றால், வாழ்நாள் முழுவதும் காவி வேட்டியே அணிய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.