புதிய பரிணாமத்தில் விமல்.. வெளியான புதிய அறிவிப்பு

தமிழில் பல படங்கள் நடித்து பிரபலமடைந்த விமல் தற்போது நடித்துள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் விமல் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. இப்படத்தின் கதாநாயகியாக மும்பையை சேர்ந்த மனிஷா அறிமுகமாகிறார். இவர் இதற்குமுன் தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 இப்படத்தை ‘ஓடியன் டாக்கீஸ்’ சார்பாக கே.அண்ணாத்துரை தயாரிக்கிறார். இதனை வேலுதாஸ் என்பவர் இயக்கியுள்ளதுடன், இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுளார்.. இவர் கனவு என்கிற குறும்படத்தை இயக்கியதற்காக கனடா சர்வதேச திரைப்பட விருது பெற்றிருக்கிறார்.

இப்படத்தில் மும்பையை சேர்ந்த ‘இந்தியன் சகீரா’ என அழைக்கப்படும் சினேகா குப்தா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவுடன் 23 வருடங்கள் உதவியாளராக பணியாற்றி வரும், அவரது சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராக ‘யாமிருக்க பயமே’ படத்தில் பணியாற்றிய ராம்மி இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னையில் 45 நாட்கள் நடைப்பெற்றுள்ளது. இதன் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!