மறுபடியும் யாரையோ காதலிக்கும் த்ரிஷா? இன்ஸ்டாகிராம் பக்கத்தால் சர்ச்சை!

நடிகை த்ரிஷா மறுபடியும் யாரையோ காதலிக்கிறார் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் காலூன்றி வருகிறார். ஆனால், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.பல முறை காதல் கிசுகிசுக்களில் சிக்கியிருந்து பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை காதலித்து அது நிச்சயதார்த்தம் வரையில் சென்றது. ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக அவர்களது திருமணம் நின்றுவிட்டது.

இதில், அப்செட்டாக இருந்த த்ரிஷா மீண்டும் யாரையோ காதலிக்கிறார் என்று பேச்சு அடிபடுகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா ரசிகர் ஒருவரது உங்களது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்து த்ரிஷா சிங்கிள் பட் டேக்கன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் மீண்டும் த்ரிஷா காதலில் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து திருமணம் பற்றி கேட்டதற்கு தேவைப்படும் பொழுது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.