நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகர் அமித்திற்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமானவர் அமித், இவர் ஸ்ரீரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீரஞ்சனி தற்போது விஜய் டிவி நிகழ்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீரஞ்சனி சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.

இதைத் தொடர்ந்து கடந்த 7-ஆம் திகதி ஸ்ரீரஞ்சனிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தையின் புகைப்படங்கள் வெளியாகவில்லை.

அமித் இப்போது சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு, வெள்ளித்திரையில் அதிகம் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.