ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவாகும் நயன்தாரா..?


சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான படம் சண்டக்கோழி 2. இப்படம் தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் வெளியானது. இப்படம் வெளியாகி 4 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.16.9 கோடி வசூல் கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. எனினும், தெலுங்கில் வெளியான இப்படம் ரூ.8.85 கோடிக்கும் அதிகமாகவே வசூல் கொடுத்துள்ளது.

இந்த நிலையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிப்பதற்கு நயன்தாரா அல்லது வித்யா பாலன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திவாகரன் கூறுகையில், அம்மாவின் வாழ்க்கை வரலாறு தனித்துவம் கொண்ட இயக்குநர் எனது நண்பர் திரு.லிங்குசாமி அவர்களால் படமாக்கப்படும். இதில் நடராஜன் மற்றும் சின்னம்மாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமிழக அரசியல் தலைவர்களுடன் இயக்குநர் பல செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து இயக்குனர் பிரியதர்ஷினி இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!