குற்றவாளிகள் திருந்தி வாழ சந்தர்ப்பம் தரவேண்டும் – வேதமானவன் விமர்சனம்

நடிகர் மனோஜ் ஜெயந்த்
நடிகை ஊர்வஷி ஜோஷி
இயக்குனர் எம்.புகழேந்தி
இசை சவுந்தர்யன்
ஓளிப்பதிவு எஸ்.கண்ணன்
ஓய்வு பெற்ற நீதிபதி மூ.புகழேந்தி எழுதி இயக்கி இருக்கும் படம்.

மனோ ஜெயந்த் ஒரு கிராமத்துக்கு மீன் விற்க வருகிறார். அந்த கிராமத்தில் பெண்கள் நகைக்காக கொல்லப்படுகிறார்கள். மீன் விற்கும் மனோ ஜெயந்துக்கும் ஊர்வசி ஜோசிக்கும் காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் நகைக்காக பெண்களை கொலை செய்வது மனோ தான் என்பது தெரிய வருகிறது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். தண்டனைக்கு பின் வெளியே வரும் மனோ திருந்தி வாழ முயற்சிக்கிறார்.

அவரை இந்த சமூகம் திருந்தி வாழ விட்டதா? அவர் ஏன் பெண்களை கொலை செய்து நகையை திருடுகிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

மனோ ஜெயந்த், ஊர்வசி ஜோசி இருவரும் புதுமுகங்கள் என்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். மற்றவர்கள் மனதில் நிற்கவில்லை. டெல்லி கணேஷ் குணச்சித்திர வேடத்தில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மூ.புகழேந்தி தான் தீர்ப்பு வழங்கிய ஒரு உண்மை சம்பவத்தையே கதையாக எழுதி இயக்கி இருக்கிறார். கதை, திரைக்கதை எதிலுமே அழுத்தம் இல்லை. மனோ கொலைகள் செய்வதற்கும் விடுதலையாவதற்கும் வலுவான பின்னணி காரணங்கள் இல்லை. குற்றவாளிகள் திருந்தி வாழ நாம் சந்தர்ப்பம் தரவேண்டும் என்ற சமூக கருத்தை சொன்ன விதத்தில் வேதமானவனை பாராட்டலாம்.

எஸ்.கண்ணனின் ஒளிப்பதிவும், சவுந்தர்யன் இசையில் வரும் பாடல்களும் ஓரளவுக்கு ஆறுதல். பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருக்கின்றன.

மொத்தத்தில் `வேதமானவன்’ சந்தர்ப்பம்.குற்றவாளிகள் திருந்தி வாழ சந்தர்ப்பம் தரவேண்டும் – வேதமானவன் விமர்சனம்


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.