என்னடா இது விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை: சங்கத்தமிழன் வெளியாவதில் சிக்கல்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படம் வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம் சங்கத்தமிழன். முதல் முறையாக விஜய் சேதுபதி இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், உலகம் முழுவதும் நாளை வெளியாக இருந்த இப்படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிலுவைத் தொகையை பட தயாரிப்பு நிறுவனம் இதுவரை தரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, விநியோகதஸ்கர்கள் படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் படம் அறிவித்தபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, விநியோகஸ்தர்களுடன் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் சுமுக உறவு ஏற்பட்டால் படம் அறிவித்தபடி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு ரூ.1 கோடி வரையில் சம்பள பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா, அனன்யா, சூரி, நாசர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!