பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் நாங்கள் இல்லை! பிரபலம் வெளியிட்ட ஆதார வீடியோ இதோ!!

கன்ன குழி அழகி யார் என்றால் நடிகை லைலா தான். தமிழ் சினிமாவில் 90களில் தில், தினா, கம்பீரம் மற்றும் பல வெற்றி படங்களில் நடித்து கலக்கிய இவரது படங்கள் இப்போதும் பலரின் பேவரெட்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்த அவர் தற்போது மீண்டும் வலம் வர ஆரம்பித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

இந்த நேரத்தில் லைலா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என தகவல் வந்துள்ளது. இதைப்பார்த்த லைலா விளம்பரத்துக்காக இப்படியெல்லாம் செய்வதா என கோபமாக டுவிட் போட்டுள்ளார்.

இவரை போலவே வளர்ந்து வரும் குனச்சித்திர நடிகர் ரமேஷ் திலக் அவரது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், இதில் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குக்கொள்ளவில்லை யாரும் நம்ம வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

https://twitter.com/thilak_ramesh/status/1126791737748246528