ஸ்டைலாக மாறிய முருகதாஸ் மகன் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் முருகதாஸ். அஜித்தை வைத்து தீனா, விஜயை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் சூர்யாவை வைத்து கஜினி என பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ்.

இவர்களை தொடர்ந்து தற்போது முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்புகளும் கூடிய விரைவில் தொடங்க உள்ளன.

இந்நிலையில் தற்போது முருகதாஸின் மகன் அவெஞ்சர்ஸ் படத்தின் ஆன்தம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் முருகதாஸின் மகன் செம ஸ்டைலிஷாக இருப்பதாக கூறி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.