‘ஐரா’ டைட்டிலின் அர்த்தம் இதுதான்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல்முறையாக பவானி, யமுனா என்ற இரட்டை வேடத்தில் நடித்த ‘ஐரா’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலான ‘ஐரா’ என்றால் என்ன அர்த்தம் என்று பலரின் மனதில் எழுந்த கேள்விக்கு படக்குழுவினர் சற்றுமுன் விளக்கம் அளித்துள்ளனர்.

‘இந்திரனின் வாகனமான ஐராவதம் ஒரு வெள்ளை யானை. யானைகள் அதன் அசாதாரணமான நினைவுத்திறனாலும், அறியும் திறனாலும் தன் வஞ்சத்திற்கு பழிதீர்த்து கொள்ளும் என்று படக்குழுவினர் டைடிட்லுக்கு விளக்கம் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து இந்த படத்தின் நயன்தாரா கேரக்டரும் தன்னுடைய அறிவுத்திறனால் எதிரிகளை புத்திசாலித்தனமாக பழிவாங்குவதே இந்த படத்தின் கதை என தெரிகிறது.

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் நயன்தாராவின் பவானி கேரக்டரின் கணவராக கலையரசன், நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் சுதர்சன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.