நடிகை சங்கீதாவின் மகளா இது? இவ்வளவு வளர்ந்துட்டாரா? – வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் நெப்போலியன் நடிப்பில் உருவாகி இருந்த பகவத்சிங் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் சங்கீதா.

பல படங்களில் நடித்த இவர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்திலும் நடித்திருந்தார். அதில் சங்கீதாவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

ஆனாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். அதே போல் இவருடைய கணவர் க்ரிஷ் கடந்த 2006-ல் வேட்டையாடு விளையாடு என்ற படத்தின் மூலமாக பாடகராக அறிமுகமானார். இவரை ஹரிஷ் ஜெயராஜ் தான் அறிமுகப்படுத்தினார்.

இவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நடுவராகி விட்டார். சங்கீதாவும் க்ரிஷும் கடந்த 2009-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இவர்களுக்கு ஷிவியா என்ற பெண் குழந்தை பிறந்திருந்தது.

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு க்ரிஷ் தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சங்கீதாவின் மகள் அதற்குள் இவ்வளவு வளர்ந்துட்டாரா? என ஆச்சரியத்துடன் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.