காமெடி நடிகர் மதுரை முத்துக்கு நேர்ந்த சோகம்! கண்ணீரில் குடும்பத்தினர்!

காமெடிகள் செய்து கலக்கி வருபவர் மதுரை முத்து. நகைச்சுவை நடிகரான அவர் அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு, சண்டே கலாட்டா என நிகழ்ச்சிகள் மூலம் தன் அபாரமான சிரிக்க வைக்கும் திறனால் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்.

தற்போது முக்கிய சானல் ஒன்றில் காமெடி நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் அவரின் மனைவி இறந்துவிட பின் மறுமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது அவரை மீண்டும் சோகம் சூழ்ந்துள்ளது. அவரின் அம்மா வெள்ளைத்தாய் இன்று காலை 8 மணியளவில் காலமாகியுள்ளார். அவரின் இறுதி சடங்கு நாளை மாலை மதுரை திருமங்கலத்தில் நடைபெறவுள்ளதாம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.