தனுஷின் அசுரன் படத்தில் இணைந்த பிரபல நடிகரின் மகன்!

நடிகர் தனுஷுக்கு அண்மையில் வந்த மாரி 2 படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதற்கு முன் வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை படம் சர்ச்சைகளை சந்தித்தாலும் ஹிட்டானது.

தற்போது அதே இயக்குனருடன் மீண்டும் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியாரும் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதியில் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் வந்த போஸ்டர் கூட மிரட்டலாக இருந்தது. இப்படத்தின் தற்போது நடிகர் கருணாஸின் மகன் கென் இணைந்துள்ளாராம். இவர் ஏற்கனவே அழகு குட்டி செல்லம், நெடுஞ்சாலை படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.