எக்கோ – விமர்சனம்

ஸ்ரீகாந்த் தன் மனைவியோடு இல்லற வாழ்வில் நுழையும் சமயம் சில பல அதிர்ச்சிகளைச் சந்திக்கிறார். அதற்கான தீர்வைத் தேடி பேய்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளரும் ஆலோசகருமான ஆசிஸ் வித்யார்த்தியைச் சந்திக்கிறார். ஆசிஸ் வித்தியார்த்தியிடம் ஸ்ரீகாந்த் விவரிக்கும் விசயங்களும், அதற்குப் பின்னால் மறைந்துள்ள நிஜங்களும் தான் இப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகன் பிம்பத்தைத் துறந்து கதையின் நாயகனாக படமெங்கும் வலம் வருகிறார் நடிகர் ஸ்ரீகாந்த். காதலனாக, கணவனாக, யாரும் எதிர்பாராத மற்றொரு பரிமாணத்திலும் அசத்துகிறார். வித்யா பிரதீப், பூஜா காவேரி இருவரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். ஆசிஸ் வித்யார்த்தி தான் ஏற்றுள்ள கேரக்டருக்கு 100 சதவீதம் நியாயம் சேர்த்துள்ளார். பேய் பற்றிய அவருடைய அறிவியல் கலந்த விளக்கம் அவர் கேரக்டரின் தன்மையை இன்னும் உயர்த்துகிறது.

காளி வெங்கட் சிறிய வேடத்தில் வந்தாலும் அதைச் சரியாகச் செய்துள்ளார். ஸ்ரீநாத், கும்கி அஸ்வின், டெல்லி கணேஷ், பிரவீனா ஆகி யோரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். பயம் காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், அதற்குள் அம்மா செண்டிமெண்ட், காதலி, மனைவி செண்டிமெண்ட் ஆகிய விசயங்களையும் சேர்த்து கவனிக்க வைத்துள்ளார் இயக்குனர் நவின் கணேஷ். முன்பாதியில் இன்னும் படம் நம் கவனத்தை குவித்திருக்க வேண்டும். இயக்குனர் ரைட்டிங்கில் கவனம் எடுத்திருக்கலாம்.

பின்பாதியில் படம் வேகம் எடுக்கிறது. எக்கோ சிறுசிறு எல்லைகள் வைத்தாலும் எல்லாருக்கும் பிடிக்கும் அளவில் வந்திருக்கிறது. இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் பின்னணி இசை படத்திற்கு உதவியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் கோபிநாத்தின் ஒளிப்பதிவு ஓகே. மொத்தத்தில் எக்கோ – நல்ல முயற்சி


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!