தரிசு நிலம் – சினிமா விமர்சனம்


வெளியூரில் படிப்பை முடித்துவிட்டு நாயகன் தனது சொந்த கிராமத்திற்க வருகிறார்கள் நாயகன் அருணும், ஜோசிகாவும் அவர்களது சொந்த கிராமத்திற்கு வருகின்றனர். அந்த ஊருக்கு தலைவராக நாயகனின் அப்பா வருகிறார். ஊர்த் தலைவராக இருந்து கொண்டு அந்த ஊரின் கீழ்சாதி மக்களை வதைத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக அவர் ஜாதி வெறி முற்றி கிணற்றில் விழுந்த நாயகனின் அம்மாவை கீழ் சாதியை சேர்ந்த ஒருவர் காப்பாற்றுகிறார்.

ஆனால் அதனை பொருட்படுத்தாத நாயகனின் அப்பா, தனது மனைவியை கீழ் ஜாதியை சேர்ந்த ஒருவன் தொட்டு விட்டதாகக் கூறி அவரை கொன்றுவிடுகிறார். அதேபோல் கோயில் உள்ளிட்ட பொது இடங்களுக்கு கீழ் ஜாதியை சேர்ந்தவர்கள் செல்வதற்கும் வரைமுறை வைத்துள்ளார். அதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கி வருகிறார்.

அதேநேரத்தில் ஊரில் நடக்கும் இந்த அக்கறமங்களை நாயகி ஜோசிகா போலீசில் மறைமுகமாக தெரிவித்து வருகிறாள். இப்படி இருக்கும் போது ஜோஷிகாவை கோயிலில் பார்க்கும் அருணுக்கு அவள் மீது காதல் வருகிறது. பின்னர் ஒரு மோதலின் மூலம் இருவரும் காதலிக்க ஆரம்பக்கின்றனர். அதேநேரத்தில் நாயகனின் தந்தையால் நாயகியின் அக்கா மீரா கொல்லபடுகிறாள். இந்த தகவல் தெரியாத தனது மகளை வீட்டிலேயே இருக்கும் படி அவரது தந்தை கூறுகிறார்.


கடைசியில் அருண் – ஜோசிகா காதல் வெற்றி பெற்றதா? அவர்களது திருமணத்திற்கு அருணின் அப்பா சம்மதித்தாரா? தனது தந்தையின் அடக்குமுறையை அருண் மாற்றினாரா? மீரா எப்படி உயிரிழந்தார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.

அருண், ஜோசிகா, மீரா, தியாகு என முன்னணி கதாபாத்திரங்கள் அனைவரது நடிப்பும் பார்க்கும்படியாகவே இருக்கிறது. அதேபோல் கோவை செந்தில், விஜய் கணேஷ், சங்கர் கணேஷ் உள்ளிட்ட கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.

வேதாஜி பாண்டியனின் இயக்கத்தில் காட்சிகள் பார்க்கும்படியாக வந்திருந்தாலும் ரசிக்கும்படியாக இல்லை. சாதியை வெறிக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்ற ஒரு கருத்தை காதல் கலந்து கொடுத்திருக்கிறார். யாரும் தீண்டத் தகதாதவர் அல்ல. இது போன்று மக்களை துன்புறுத்தக் கூடாது என்பது உள்ளிடவற்றை சொல்லி வந்திருப்பது போல தோன்றுகிறது.

ரவீந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சுமாராக வந்திருக்கின்றன. ஜான், எம்.வி.ரகு, சங்கர் கணேஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான்.

மொத்தத்தில் `தரிசு நிலம்’ சிலசமயம் உதவும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#