கோலிவுட்டில் களம் இறங்கும் ஜூனியர் ஹன்ஷிகா..!! யாருனு தெரியுமா..?


பெரும்பாலான ஹீரோயின்கள், தங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் மட்டுமே நடிப்போம் என, அதிரடியாக அறிவித்துள்ளதால், கவர்ச்சி ஹீரோயின் வேடங்களில் நடிப்பதற்கு, கோலிவுட்டில் கடும் பஞ்சம் நிலவுகிறது.

அதிலும், அறம் படத்தில், நயன்தாராவின் நடிப்பை பார்த்த பின், தற்போது முன்னணியில் உள்ள அனைத்து ஹீரோயின்களும், அந்த மனநிலைக்கு வந்து விட்டனர். இந்த இடைவெளியை பயன்படுத்தி, அதிக பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார், நெஞ்சில் துணிவிருந்தால் ஹீரோயின், மெஹரின். இவர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். ‘மாடலிங்’ துறையில் புகழ்பெற்றதுடன், பிரபலமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.


தெலுங்கு பட உலகம் தான், மெஹரினை முதலில் வளைத்தது. அதன்பின், பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கிய அவரது பார்வை, தற்போது கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. பார்ப்பதற்கு, ஜூனியர் ஹன்சிகா போன்ற தோற்றத்தில் இருப்பதால், தமிழில், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக கூறுகிறது, கோலிவுட் வட்டாரம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#