64 வயதிலும் கமல்ஹாசன் இவ்வளவு இளமையாக இருக்கிறதுக்கு காரணம் என்ன தெரியுமா..?


இன்றைய தலைமுறையின் ஆரோக்கியமான ஆயுட்காலம் கிட்டத்தட்ட 50 வருடத்திற்கும் குறைவாக தான் இருக்கிறது. சிறு வயதிலே இப்படி சோர்ந்து விடுகின்ற நம்மில் பலருக்கு மிக பெரிய கேள்வியாக இது நிச்சயம் இருக்கும். எப்படி கமல்ஹாசன் அவர்கள் இந்த வயதிலும் இவ்வளவு இளமையாகவும், துடிப்புடனும் இருக்கிறார்..? உண்மையில், இவரின் சமகால பிரபலங்களில் பலர் இந்த அளவுக்கு ஆரோக்கியத்துடன் இல்லை என்பதே நிதர்சனம்.

அப்படி என்ன தான் கமல்ஹாசன் சாப்பிடுகின்றார் என்கிற புதிருக்கு விடையை தருகிறது இந்த பதிவு. வாங்க, கமல்ஹாசனின் உணவு ரகசியத்தை முழுமையாக தெரிந்து கொள்வோம்.

தமிழ் சினிமாவில் மக்களுக்கு பிடித்தமான நடிகராகி விட்டால், எளிதில் அவர்களுக்கு அன்பு பெயர் சொல்லி மக்கள் அழைக்க தொடங்குவர். அப்படிப்பட்ட திறன்களுடன் என்றுமே சினிமா துறையில் கொடிகட்டி பறக்க கூடியவர் தான், திரு. கமல்ஹாசன் அவர்கள். பன்முக நடிப்பாற்றல், கலையின் மீது கூரிய பார்வை, எல்லா துறையை பற்றிய ஞானம் போன்றவை தான் இந்த அளவுக்கு இவர் நிலைத்திருக்க முக்கிய காரணமாகும்.

என்னதான் பிரபல நடிகர் என்றாலும் இவருக்கென்று தனி விருப்பு வெறுப்பு எப்போதும் இருக்க தான் செய்யும். ஒரு நடிகனுக்கு நடிப்பு திறனை வெளிக்காட்ட ஆரோக்கியமான உடல் அமைப்பு கட்டாயம் தேவை.


இதற்கு எந்த விதத்திலும் இவர் குறைந்தவர் இல்லை. சாப்பாட்டு விஷயத்தில் அசைவ விரும்பியாக இருக்கிறவர். அதே அளவிற்கு உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வருவார்.

மற்ற உணவுகளை விட கமல்ஹாசனுக்கு மீன் என்றால் அலாதி பிரியமாம். மீன் சாப்பிடுவதில் இருந்த காதல், அவருக்கு மீன் சமைப்பதற்காகவே தனி சமையல்காரரை சமையலுக்கு வைத்திருந்தாராம். இதிலிருந்தே அவரின் மீன் மீதான பிரியம் உங்களுக்கு புரிந்திருக்கும்.

கமலின் பொதுவுடைமை நாட்டம் பற்றி நம் அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்கும். கேரளாவின் கம்யூனிசம் மட்டுமன்றி வேறு ஒரு சிறப்புமிக்க ஒன்றையும் கமல் அதிகம் விரும்புவார். அது கேரளத்தின் கறிமீன் தான்.

கறிமீன் ப்ரை என்றாலே கமலுக்கு தனி பிரியமாம். இவர் கேரளத்திற்கு சென்றால், அடிக்கடி இந்த கறிமீன் ப்ரையை தான் சாப்பிடுவாராம்.

நம் நாட்டு உணவை அதிகம் விரும்பி சாப்பிடும் கமல் அவர்களுக்கு, வேறு சில நாட்டினரின் உணவு முறையும் பிடிக்குமாம். குறிப்பாக பெர்சியர்களின் உணவு முறை இவர் அதிகம் விரும்புவாராம்.
சென்னையில் ECR ரோட்டில் உள்ள Shiraz Cafe என்கிற கடையில் பெர்சியர்களின் உணவு கிடைக்குமாம். உணவு பிரியர்களே, நீங்களும் இந்த உணவுகளை ஒரு கை பார்க்கலாமே..!

மாட்டிறைச்சியை பற்றிய சர்ச்சை கிளம்பிய போது, அதை பற்றிய ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். “நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். பிறர் சாப்பிட வேண்டுமா..? கூடாதா..? என்பதை அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.


மற்றவரின் விருப்பத்தில் நாம் தலையிட கூடாது. மேலும், மற்றவர் எதை சாப்பிட வேண்டும் என்கிற மெனுவை யாரும் சொல்லவும் கூடாது” என்கிற கருத்தை முன் வைத்தார்.

புதிதாக அரசியல் மீது அதிக நாட்டம் கொண்ட கமல் அவர்களுக்கு, பல வருடங்களாக பிரியாணி மிகவும் பிடித்த உணவாக உள்ளதாம். ஒரு சில குறிப்பிட்ட நடிகர்களுக்கு எப்படி பிரியாணி மீது தனி காதல் உள்ளதோ அதே போன்று தான், இவருக்கும் பிரியாணி ரொம்ப பிடிக்குமாம்.

கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசனுக்கு பீப்ஃ என்றால் அலாதி பிரியமாம். மற்ற உணவுகளை காட்டிலும் இவருக்கு பீப்ஃ தான் அதிகம் பிடிக்குமாம். மேலும், அசைவ உணவுகளை தந்தையை போலவே இவரும் அதிகம் விரும்பி சாப்பிடுவாராம். என்னதான், அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும் அதே அளவிற்கு உடல் எடையையும் கவனமாக ஸ்ருதி பார்த்து கொள்வாராம்.

கமல்ஹாசன் அவர்கள் முன்பை போன்று இப்போதெல்லாம் அதிகம் அசைவம் சார்ந்த உணவுகளை சாப்பிடுவதில்லையாம். தனது வயதின் காரணத்தாலும், அரசியல் நாட்டத்தாலும், உணவின் மீது இப்போதெல்லாம் அதிக கவனம் கொள்கிறாராம். ஆனால், அவருக்கு பிடித்த கறிமீனை எப்போதும் விடுவதும் இல்லையாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!