அடங்க மறு – சினிமா விமர்சனம்


உண்மையாக செயல்படும் நேர்மையான காவல்துறை அதிகாரி வேலையை இழக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் அவரின் குடும்பத்தினரை எதிரிகள் கொன்றுவிடுகிறார்கள். பதவி பறிபோன நிலையில் எப்படி அந்த போலீஸ் அதிகாரி, தன் குடும்பத்திரனை கொலை செய்தவர்களை பழி வாங்குகிறான் என்பதே கதை.

நேர்மையான காவல் உதவி ஆய்வாளரான ஜெயம் ரவிக்கு ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் குழந்தைகள், காதலி (ராஷி கண்ணா), நண்பர்கள் என சந்தோஷமான குடும்பம் ஜெயம் ரவியினுடையது. நேர்மையாக செயல்படும் அவரின் வாழ்க்கையில் திருப்பமாக ஒரு வழக்கு அமைகிறது. இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார்.


அந்த வழக்கை விசாரிக்காமல் அதை தற்கொலை என்று முடித்துக்கொள்ளும்படி உயர் அதிகாரி சொல்கிறார். அதை கேட்காமல் அவர் அந்த பெண்ணை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கிறார்.

ஆனால் குற்றவாளிகளான 4 இளைஞர்களையும் காப்பாற்ற உயர் அதிகாரியான சம்பத் முயற்சிக்கிறார். சம்பத்தின் சூழ்ச்சியால் ஜெயம்ரவியால் குற்றவாளிகளுக்கு எதிரான தடையங்களை சேகரிக்க முடியவில்லை. அதனால் அவர் வேலையை இழக்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர் கொலை செய்யப்படுகின்றனர்.

எந்த அதிகாரமும் இல்லாமல் தனது தனி முயற்சியால் எப்படி ஜெயம்ரவி வில்லன்களை பழிவாங்கிறார் என்பது மீதி கதை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!