விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் பெயர் மற்றும் கதாபாத்திரம் என்ன தெரியுமா..?


அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடிக்கும் நயன்தாராவின் கேரக்டர் பெயர் நிரஞ்சனா என்று தெரிய வந்துள்ளது.

இயக்குனர் சிவா, அஜித்தை வைத்து 4வது முறையாக இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

டீசர், டிரைலர் என எதுமே வெளியிடப்படாத இப்படத்தின் இரண்டு போஸ்டர்களும் ஒரு மோஷன் போஸ்டர் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ள அஜித்தின் இளம் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவின் கதாபாத்திர பெயர் நிரஞ்சனா என தற்போது வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!