காதலன் படத்தில் கலக்கிய நம்ம பிரபலங்கள் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?


ஷங்கர் இயக்கத்தில் காதலன் படத்தில் நடித்த நடிகர்களின் அன்றைய பழைய புகைப்படமும் இன்றைய புதிய புகைப்படமும்.

சுந்தரம் மாஸ்டரின் மகனான டான்சர் பிரபுதேவா கதாநாயகனாக மாறினார். சங்கரின் பிரம்மாண்டத்தில் இளம் வயது பிரபுதேவா நடிக்க ஆரம்பித்த ஆரம்பத்திலேயே பல ரசிகர்களும் ரசிகைகளும் பெற்றார்.

இப்பொழுது இருக்கும் பிரபுதேவா ஆளே மாறிவிட்டார். ஹிந்தியில் இயக்குனராக அவதாரம் எடுத்து வெற்றியும் பெற்றார். தற்பொழுது தமிழ் சினிமா பக்கமும் தலைகாட்ட தொடங்கிவிட்டார். இதுதான் கடைசியாக லட்சுமி படத்தில் நடித்த பிரபுதேவாவின் புகைப்படம்.


ஜோதிகாவின் அக்கா நக்மா சிறுவயதிலேயே சற்று குண்டாக அழகாக இருப்பார். காதலன் படத்தில் அவர் நடிப்பு நன்றாக பேசப்பட்டது. பிரபுதேவா ஜோடியும் நல்ல பெயர் பெற்றது.

நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் தலைகாட்ட ஆரம்பித்தார் நக்மா. பின்னர் காங்கிரஸில் இணைந்தார் நல்ல பதவியும் பெற்றார். இப்பொழுது இருக்கும் நக்மாவை பாருங்கள்.

ஸ்டைலிஷ் வில்லன் ரகுவரன் காதலன் படத்தில் மாஸ் வில்லனாக இருப்பார். அவருக்கான தீம் மியூசிக் பிரம்மாண்டத்தை கூட்டி காமிக்கவும். ரகுமான். பாட்ஷா படத்தில் இருக்கும் ரகுவரனை போன்று இந்த படத்திலும் இருப்பார்.


ரகுவரன் நம்மை விட்டு மறைந்து விட்டாலும் அவருடைய நடிப்பு என்றுமே மறையாது. அவர் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் அவரது நடிப்பை காண்பித்திருப்பார்.

நக்மாவின் அப்பாவாக நடித்திருக்கும் கிரிஷ் கார்னாட் எதார்த்தமான நடிப்பில் கவர்ந்து இருப்பார். அவர் வில்லன் வேடமாக இருந்தாலும் குணச்சித்திர வேடமாக இருந்தாலும் நன்றாக நடிக்கக்கூடிய மிகப்பெரிய நடிகர்.

கிரிஷ் கார்னட் ஒரு சிறந்த பேச்சாளர் சமூக பிரச்சினைகளிலும் அவர்கள் அடிக்கடி தலை காட்டுவார். அவர் காதலன் படத்தில் நடித்தது போலவே இப்போதும் இருக்கிறார் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம்.

நம்ம வைகைப்புயல் வடிவேலுக்கு காதலன் படம் சிறந்த திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. இவ்வளவு பெரிய பிரம்மாண்ட படத்தில் ஷங்கர் வடிவேலுவின் காமெடியை நம்பி வாய்ப்பு கொடுத்தார். அதனையும் வடிவேலு சரியாக பயன்படுத்திக் கொண்டார்.


பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரபுதேவாவின் அப்பாவாக நடித்திருப்பார். அவருக்கு ஒரு பாடலும் இருக்கும் படத்திலும் மிக அற்புதமாக நடித்திருப்பார்.

சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு நேரம் கிடைக்கும் பொழுது மட்டும் மேடைகளில் பாடுவார். வயதான தோற்றத்துடன் இருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் புகைப்படம்.

காதலின் படத்தின் கடைசியில் சிறிது நேரம் மட்டும் வரும் மனோரமா மிக கலகலப்பாக நடித்திருப்பார். அவரின் படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கடைசியாக அவர் நடித்த படங்களிலும் நன்றாகவே நடித்திருப்பார். அவர் மறைந்து சில வருடங்கள் ஆனாலும் அவர் படங்களின் எண்ணிக்கை மிக அதிகம். அஜீத் குமாரும் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க நேரில் சென்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.