பிரபாஸ் நடிக்கும் அதிபுருஷ் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா.. அடேங்கப்பா

பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியளவில் நடிகர் பிரபாஸின் மார்க்கெட் பல கோடிக்கணக்கில் உயர்ந்துள்ளது.

பாகுபலி படத்தை தொடர்ந்து வெளிவந்த சாஹா திரைப்படம் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவானது.
இதனை தொடர்ந்து உருவாகியுள்ள ராதேஷ்யாம் திரைப்படம் படம் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாகிக்கொண்டிருக்கும் படம் தான், அதிபுருஷ்.
பிரபாஸ், கிருதி சானோன், சைப் அலி கான் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் இப்படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

சரித்திர கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையக்கருவாக வைத்து உருவாகி வரும் அதிபுருஷ் திரைப்படத்தை, ஓம் ரவுத் என்பவர் இயக்கி வருகிறார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!