இணையத்தில் வைரலாகும் தனுஷ் பட நாயகியின் அரைநிர்வாண புகைப்படம்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அனேகன்’ படம் உள்பட ஒருசில படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை அம்ரியா தஸ்தூர். இவர் தற்போது ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற தமிழ் படத்திலும் இரண்டு இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அதுபோக ஒரு வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அம்ரியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அரைநிர்வாணமாக முதுகை காண்பித்து உட்கார்ந்தவாறு உள்ள அந்த புகைப்படத்தில் அவரது முன்னே ஒரு உலக வரைபடமும், பாஸ்போர்ட், கேமிரா, தொப்பி உள்பட ஒருசில புகைப்படங்களும் உள்ளது.

https://www.instagram.com/p/BzIf_4aAL4p/

மேலும் அம்ரியாவின் முதுகில் பிக்பாஸ் கண் போன்று ஒரு கண் டாட்டூ வரையப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவரது ரசிகர்களில் சிலர் இந்த புகைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர், இந்த புகைப்படம் அவர் நடித்து வரும் வெப் சீரீஸிற்காக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.