முத்துசாமியின் இறுதிச்சடங்கில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகர்கள்..!! வைரல் புகைப்படம்..!!


மறைந்த கூத்துப்பட்டறையின் நிறுவனர் முத்துசாமியின் இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள் விமல், விதார்த், பசுபதி, சோம சுந்தரம் உள்ளிட்ட பலநடிகர்கள் குத்தாட்டம் ஆடி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்

கூத்துப்பட்டறையின் நிறுவனர், பல நடிகர்களை உருவாக்கிய பிதாமகன் என்று பெருமையோடு அழைக்கப்படும் ந.முத்துசாமி அவர்கள் நேற்று (24.10.18) காலமானார்

தற்போது திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நாசர், பசுபதி, விஜய் சேதுபதி, விமல், பாபிம் சின்ஹா, சோம சுந்தரம், உட்பட பல நடிகர்கள் இவரது கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள்.


இந்நிலையில் நேற்று அவர், மறைந்த செய்தி வெளியான நிலையில் அனைத்து நடிகர்களும் முத்துசாமியின் இல்லத்திற்கு சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து முத்துசாமியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர்கள் நடு ரோட்டில் விமல், பசுபதி, விதார்த் உள்ளிட்ட பலர் குத்தாட்டம் ஆடி அவருக்கு இறுதி மரியாதையை செலுத்தினார்கள்.இவ்வாறு தங்களின் குருவிற்காக நடிகர்கள் ஆவேசமாக ரோட்டில் நடனமாடிய வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!