எனக்கு அவரை மட்டும்தான் ரொம்ப பிடிக்கும்..!! ரகசியத்தை போட்டுடைத்த ஓவியா..!!


பிக்பாஸ் மூலம் பெரும் புகழ் பெற்றவர் நடிகை ஓவியா. இதனை அடுத்து நடிகை ஓவியா பல சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.

இவரிடம் சமீபத்தில் பொங்கல் நிகழ்ச்சிக்காக பிரபல தனியார் தொலைக்காட்சி நேர்க்காணல் நடத்தியது. அப்போது இவரிடம் வழக்கம் போல அஜித் விஜய் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது விஜய் மற்றும் அஜித்துடன் நடிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பு வந்தால் யாருடன் நடிப்பீர்கள் என கேட்கப்பட்டது.


அதற்கு அவர் சுற்றி வளைக்காமல் தளபதிதான் என் சாய்ஸ் என்று பொட்டில் அடித்தாற்போல கூறினார்.

எதையும் வெளிப்படையாக பேசிவிடும் நடிகை ஓவியாவின் இந்த பேச்சு அஜித் ரசிகர்களிடையே லேசான வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி