2 முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்திலிருந்து ரகுல் ப்ரீத் சிங் நீக்கம்!

7/G ரெயின்போ காலனி’ படத்தின் கன்னட ரீமேக் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். இதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வந்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான தமிழ் படம் ‘தேவ்’. தற்போது, ரகுல் ப்ரீத் சிங் கைவசம் தமிழில் ‘NGK, சிவகார்த்திகேயனின் சைன்ஸ்-ஃபிக்ஷன் படம்’, ஹிந்தியில் ‘மர்ஜாவான்’ என மூன்று படங்கள் உள்ளது.

சமீபத்தில், ‘வெங்கி மாமா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமானார். இந்த படத்தில் வெங்கடேஷ், நாகசைத்தன்யா நடிக்கவுள்ளனர். வெங்கடேஷுக்கு ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கவிருக்கிறார். நாகசைத்தன்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவிருந்தார்.

ஆனால், தெலுங்கில் நாகர்ஜூனாவின் ‘மன்மதுடு 2’ என்ற படத்தில் நடிக்கவும் ரகுல் ஒப்புக்கொண்டதால், ‘வெங்கி மாமா’ படத்தின் தயாரிப்பாளர் “அதில் அப்பாவுக்கு ஜோடி, நம்ம படத்தில் மகனுக்கு ஜோடியா? வேண்டாம் வேறு ஒரு ஹீரோயினை கமிட் செய்யுங்கள்” என்று இயக்குநர் கே.எஸ்.ரவீந்திராவிடம் கூறியுள்ளார். தற்போது, ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பதிலாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷூட்டிங்கை பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.