இரட்டை அர்த்த பேச்சுக்கள்.. காரணமின்றி உரசல்கள்.. அத்தனையும் போட்டுடைத்த அமலாபால்..!!


சமீபகாலமாக நடிகைகள் மற்றும் பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக metoo என்ற ஹாஸ்டேக் மூலம் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, பிரபல இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை சுசிகணேசன் முற்றிலும் மறுத்துள்ளார்.

மேலும், தன் மீது அவதூறு பரப்பும் லீனா மணிமேகலைக்கு எதிராக அவர் ஏற்கனவே, சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் சுசிகணேசன் சென்னை பெருநகர உரிமையியல் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை லீனா மணிமேகலை கூறியுள்ளார்.


இதனால் எனக்கு ஏற்பட்டுள்ள மனஉளைச்சல் மற்றும் பாதிப்புக்கு ந‌ஷ்ட ஈடாக ஒரு ரூபாயை உரிமையியல் சட்டத்தின் கீழ் வழங்க லீனா மணிமேகலைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சற்றுமுன் நடிகை அமலா பால் தமிழ் திரை உலகமே அதிரும் வகையில் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ”இயக்குனர் சுசிகணேசன், இரட்டை அர்த்த பேச்சுக்கள், காரணமின்றி உரசல்களை படப்பிடிப்பில் செய்ததாகவும், இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் புகார் தெரிவித்த கவிஞர் லீனா மணிமேகலைக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும், இயக்குனர் சுசிகணேசனிடம், கவிஞர் லீனா மணிமேகலை என்ன பாடு பட்டிருப்பார் என்று எனக்கு தெரியும் என்றும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!