வைரலாகி செம்மையா கலக்கும் சிவகார்த்திகேயன், நயன்தாரா புகைப்படம்..!!


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான சீமராஜா படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. தற்போது இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இவர் தற்போது நடித்து வரும் படத்திற்கு ஜித்து ஜில்லாடி என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில், மேலும் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ஹிப் ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிவகார்த்திகேயன்,ராதிகா, நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!